என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று தீபா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2 நாட்களாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. போயஸ் தோட்ட இல்லத்தில் போதிய பாதுகாப்பு இல்லை. தனியாக வருமாறு தீபக் அழைத்தார் தனியாக வர மாட்டேன் என்று மறுத்தேன். தீபக் அழைத்ததாலேயே போயஸ் தோட்ட இல்லம் சென்றேன். வேதா இல்லம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இதுபோல நடக்கும் என எதிர்பார்க்கவில்லை போயஸ் இல்லத்தில் காவலர்கள் இல்லை. ஜெயலலிதாவை தீபக் கொன்றது குறித்து ஆதாரங்களுடன் நிரூப்பேன். தீபக் என்னிடம் தொலைபேசியில் பேசிய ஒலிப்பதிவு என்னிடம் இருக்கிறது. தீபக் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி விட்டேன். போயஸ் கார்டனின் உயில் என்னிடம் தான் உள்ளது. ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்பதால் தான் இதனை வெளியிடவில்லை. பணம், நகைகளை மாதவன் திருடியது போன்ற சம்பவம் ஏதும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தன்னை தாக்கியதாக தீபா அடையாளம் காட்டும் நபர் தமிழக உளவுத்துறை காவலர் என தெரியவந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், 200 உளவுத்துறை போலீசார் போயஸ் தோட்டத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட்ட பின்னர் தற்போது உளவுத்துறை காவலர் தாக்கியதாக எழும் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





