ப்ளு வேல் விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புளூ வேல் கேம் விபரீதம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.

புளூவேல் கேம் விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் மதுரையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டில் தமிழக இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அரசும் காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புளூ வேல் கேமை தடைசெய்ய மத்திய தகவல் ஒலிபரப்புதுறைக்கு உத்தரவிடகோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சசிதரன் – சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு முறையீட்டார்.

அப்போது தாங்களாகவே முன் வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகக் கூறிய நீதிபதிகள் திங்கட் கிழமை விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

https://www.youtube.com/watch?v=_WGMN6qWPwA

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *