ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பட்டியலை சரிபார்த்து அதில் பிழை அல்லது திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், அதனை ஆன்லைன் மூலம் வருகிற 20ஆம் தேதிக்குள் பயனாளிகளே சரிசெய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறையில் 286 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 623 பின்னடைவு பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் உள்ள 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப் பட்டியல் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் தங்களின் சுய விவரங்களை அசல் ஆவணங்களை கொண்டு விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களை திருத்தவும், மேம்படுத்தவும் வேண்டும் எனும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites