தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின் படங்களை வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கம்!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னை : தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரு இணைய தளங்களின் நிர்வாகிகள் என்று கூறி இரு நபர்களின் படங்களை தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது.

இவர்களைப் பற்றி தகவல் தருமாறும் அச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழில் வெளியாகும் புதிய படங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றி, திரைத் தொழிலை சிதைப்பதாக இந்த இணைய தளங்களின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், அண்மையில் வேலூர் அருகே திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரி சங்கர் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.

இந்த நிலையில் இப்போது இங்கிலாந்தில் வசிக்கும் டிக்சன் ராஜ் ஆறுமுக சாமி (தமிழ்கன், தமிழ்தபாக்ஸ் நிர்வாகி), தமிழ் ராக்கர்ஸ் மாடரேட்டர் அரவிந்த் லோகேஷ்வரன் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

இவர்கள் பற்றி விவரம் தந்தால் தகுந்த சன்மானம் தரப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *