அதிமுக ஆட்சி கவிழும் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது – முதல்வர் ஆவேசப் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஈரோடு: அதிமுக ஆட்சி நிலைக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது ஒரு போதும் நடக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

ஈரோட்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உள்பட பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும், விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அந்த உரையில், அதிமுக அரசு ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு பதவியேற்ற போது இந்த ஆட்சி நிலைக்காது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அதேபோல், பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்காது என்றார். ஆனால் கூட்டம் எந்த இடையூறும் இல்லாமல் நடந்தது.

அதனையடுத்து மாநிலக் கோரிக்கைகள் கூட்டம் நடக்காது என்றார் மு.க.ஸ்டாலின். அதுவும் நடந்தது. இந்த ஆட்சி கவிழும் என்ற மு.க. ஸ்டாலின் கனவு ஒரு போதும் பலிக்காது என முதல்வர் ஆவேசமாகக் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *