பாராளுமன்ற தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த சீமான்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரைமணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதேபோன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் வாக்களித்தனர்.

வாக்களித்த பிறகு பிரேமலதா அளித்த பேட்டியில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.