சசிகலா கணவர் நடராஜனுக்கு சிறை செல்ல விலக்கு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட சிறைச் செல்ல தற்காலிமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் காரை இறக்குமதி செய்த போது ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வந்தது. அதன் பின் கடந்த 2010ம் ஆண்டு சிபிஐ முதன்மை நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. அதில், நடராஜன் உட்பட அனைவருக்கும் தலா 2 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த வழக்கை எதிர்த்து நடராஜன் உட்பட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கடந்த மாதம் 17ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரனைக்கு வந்தது. இதில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் உடல்நலம் காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நடராஜன் மற்றும் பாஸ்கரனுக்கு விலக்கு அளித்துள்ளது. இருவரும் தற்காலிகமாக சிறை செல்வதில் இருந்து நீதிபதி குப்தா விலக்கு அளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *