ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம், 114 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிட ‘அ.தி.மு.க., அம்மா’ சார்பில் சசி அக்காள் மகன் தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க., சார்பில் மருத கணேஷ், பா.ஜ., சார்பில் கங்கை அமரன் தே.மு.தி.க.,வின் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோகநாதன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்புமனுவுடன் அவர்கள் தாக்கல் சொத்துக்கள் குறித்த பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். இந்த விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மனைவிக்கு கடன்:
அதில், தினகரனுக்கு அசையும் சொத்து மதிப்பு ரூ.11 லட்சத்து 45 ஆயிரம், அசையா சொத்தின் மதிப்பு ரூ.57 லட்சம் எனக்குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவி பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 18 லட்சம் எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம் எனவும், மனைவி பெயரில் ரூ.5 கோடியே 40 லட்சம் ரூபாய் வங்கி கடன் உள்ளது. தன் மீது பெரா உள்ளிட்ட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

வழக்கு இல்லை:
அதிமுக புரட்சி தலைவி அம்மா சார்பில் போட்டியிடும் மதுசூதனன் தனக்கு அசையும் சொத்து மதிப்பு 18 லட்சத்தி 89 ரூபாய். அசையா சொத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 37 லட்சம். மனைவி பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.51 லட்சத்து 71 ரூபாய், அசையா சொத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 30 லட்சம் எனவும், தன் மீது எந்த வழக்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தீபாவுக்கு ரூ.3 கோடி சொத்து:
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1.05 கோடி எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.2 கோடி என தெரிவித்துள்ளார். தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ், தனக்கு அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 79 ஆயிரத்து 531 எனவும், மனைவி பெயரில் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 8 ஆயிரத்து 606 எனக்கூறியுள்ளார்.
தே.மு.தி.க., வேட்பாளர் மதிவாணன் தனது சொத்தின் மதிப்பு ரூ.40.69 லட்சம் எனவும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் சொத்து மதிப்பு ரூ.6.5 லட்சம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *