காலம் வந்தால் சினிமாவில் மட்டுமில்லை அரசியலிலும் மாற்றம் வரும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்த சந்திப்பின் இறுதியில் ரஜினி அரசியலுக்கு வருவது தொடா்பான முக்கிய முடிவுகளை அறிவிக்கலாம் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இன்று 4 ஆம் நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த்,“சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி காலம் மிக முக்கியம். காலம் வரும்போது எல்லாம் தானாக மாறும்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் “ஒருவன் வாழும் வாழ்க்கையை வைத்தே மக்கள் அவனை மதிப்பார்கள். ஒருமுறை கோவையில் ரசிகர்களின் ஆதரவைப் பார்த்து சிவாஜி இது உன்னுடைய காலம் என்று என்னை வாழ்த்தினார். “ஆன்மிகத்தைக் கற்றுக்கொடு, மதத்தைக் கற்றுத்தராதே என்று குருநாதர் சச்சிதானந்தர் கூறியதாகவும், குடும்பம், தாய், தந்தை, பசங்களை பார்த்துக் கொண்டு மதிக்கத்தக்கவர்களாக வாழ வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *