சட்டப்பேரவைக்கு வருவாரா கருணாநிதி?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரால் சட்டசபைக்கும் சரி அரசியல் நிகழ்வுகளிலும் சரி கலந்துகொள்ள முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடருக்கும் கருணாநிதி செல்லவில்லை. அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சரியாக பிராத்தனை செய்வதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.

நேற்று தமிழக சட்டசபையில் குட்கா ஊழல் குறித்து பேச சபாநாயகர் தனபால் அனுமதி தராததால் திமுக வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் கருணாநிதி நன்கு உடல்நலம் தேறி, வரும் கூட்டத்தொடரில் பங்கேற்க பிரார்த்திக்கிறேன், அவர் விரைவில் குணமடைந்து பேரவை நிகழ்வில் பங்கேற்க ஆசைப்படுகிறேன் என கூறினார்.

இந்நிலையில் பொங்கல் தினத்தையொட்டி திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *