ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி

ஓ.பி.எஸ்.,சை மீண்டும் தமிழக முதல்வராக்குவோம் என ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் கூறினார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தண்டையார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில்தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மதுசூதனனுடன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை மா.பா., கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

குடும்ப ஆட்சி:
பின்னர் மதுசூதனன் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., ஆசி எனக்கு உள்ளது. அவரின் ரசிகனாக இருந்தவன். தொகுதியில் மக்கள் பணி தீவிரமாக செய்துள்ளேன். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதிகாரிகள் சின்னத்தை அறிவிப்பார்கள். குடும்ப ஆட்சியை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர்., தர்மயுத்தம் நடத்தினார். ஆர்.கே. நகர் மக்கள் ஓ.பி.எஸ்.,சை நேசிக்கின்றனர்.

எம்ஜிஆர்., ஜெயலலிதா கட்டி காத் குடும்பம் அதிமுக. சசி குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு அதிமுகவை கைப்பற்றற வேண்டும். சசி குடும்பத்திலிருந்து தொண்டர்கள் விலக வேண்டும். குடும்ப ஆட்சிக்கு எதிராகவே நாங்கள் போட்டியிடுகிறோம்.

சசிகலா வற்புறுத்தலின் காரணமாக தினகரனுக்கு, எம்.பி., பதவியை அளித்தார் ஜெயலலிதா. இடைத்தேர்தலுக்கு பின் கட்சி, ஆட்சி, சின்னத்தை கைப்பற்றுவோம். ஓ.பி.எஸ்.,சை மீண்டும் முதல்வராக்குவோம். கடந்த 1991க்கு முன்னர் சொத்துவிபரத்தை சசி வெளியிடதயாரா?இவ்வாறு அவர் கூறினார். மா.பா.., பாண்டியராஜன் கூறுகையில், தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என்றார்.

 

Tamil Technology News

 

Tamilnadu News