கோமாளி அமைச்சர்களின் தலைவர் செல்லூர் ராஜூ

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தினகரன் ஆதரவாளரான நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அமைச்சர்களை கோமாளி அமைச்சர்கள் எனவும். சில அமைச்சர்கள் வடிவேலுவின் இடத்தை நிரப்புகிறார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதவாத கட்சிகளோடு அதிமுக கூட்டணி வைக்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ பாஜக மீது திடீரென தனது எதிர்ப்பை காட்டினார். இதுகுறித்து தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்திடம் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், செல்லூர் ராஜூவின் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. வடிவேலு இல்லாத குறையை தமிழ்நாட்டில் இப்போது சில அமைச்சர்கள் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த கோமாளி அமைச்சர்களுக்கு தலைமை தாங்குகிற இடத்தில் இருக்கிறார் செல்லூர் ராஜு என்றார் காட்டமாக.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *