மதுசூதனன் வெற்றி உறுதி: ஓ.பி.எஸ்.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆர்.கே. நகரில் மதுசூதனன் வெற்றி உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார். தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். தேர்தலை ஆணையம் முறையாக நடத்த வேண்டும். இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொன்று ஜெயலலிதா. இதனால் உறுதியான வெற்றி பெறுவார். எங்களது சின்னம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

போராடுவோம்:
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பேட்டி:அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கிடைக்க போராடுவோம். இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க எல்லா முயற்சியையும் எடுப்போம். தேர்தலில் ஜெயலலிதாவின் சாதனைகளை முன்னிறுத்துவோம். மதுசூதனன், இங்கு வளர்ச்சி நாயகனாக செயல்பட்டதை எடுத்து சொல்வோம். ஜெ., வீட்டை நினைவு இல்லமாக்க தேவையான முயற்சிகள் செய்வோம். நாளை முதல் ஓ.பி.எஸ்., பிரசாரம் மேற்கொள்கிறார். தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றுவோம். நாளை( மார்ச் 27) காலை முழுமையான தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *