ஜெயலலிதா இருந்தபோது ஊழல் பற்றி கருத்து கூறாதவர் கமல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஊழல் பற்றி கருத்து கூறாத கமல்ஹாசன், தற்போது ஏன் விமர்சித்து வருகிறார் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் கோட்டை மைதானத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் 11-ம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக வளர முதன்முதலில் பிரசாரம் செய்தேன் என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா இறப்புக்கு பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதாக கூறினார்.

மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து இனியாவது கட்சியில் குழப்பத்தை விளைவிக்காமல், சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்தார்.

கமல் ஏதேனும் போராட்டங்களில் பங்கேற்றாரா என கேள்வி எழுப்பிய சரத்குமார், ஜெயலலிதா இருந்தபோது ஊழல் பற்றி கமல் எதுவும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *