ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை தேவை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தர்மத்தோடு யுத்தம் நடத்துபவர்கள் தர்மயுத்தம் நடத்துவதாக சொல்கிறார்கள்.

அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது அவர்கள்தான் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள். அம்மா அவர்களின் மரணம் குறித்து அவர்களிடம்தான் நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்.

நிழலோடு யுத்தம் செய்யாதீர்கள். தர்மத்தை எதிர்த்து யுத்தம் செய்யாதீர்கள். தர்மம் தான் வெற்றி பெறும். மக்கள், தொண்டர்கள் ஆதரவுள்ள இயக்கத்தை 10 பேர் சேர்ந்து கொண்டு ஒன்றும் செய்துவிட முடியாது.

ஒருசிலர் செய்கிற குழப்பங்களால் தொண்டர்கள் கலங்க வேண்டாம். நாடாளுமன்றத்தேர்தலை கவனத்தில் கொண்டு நடப்போம்’ எனக் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *