ஜெயலலிதா ஆபத்தான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் குறித்து ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகிறது

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் உள்பட பலர் விசாரணை கமிஷன் முன் ஆஜராகி வரும் நிலையில் சற்று முன்னர் அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பல திடுக்கிடும் உண்மைகளை கூறி வருகிறார்

ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என அறிக்கை தரப்பட்டதாகவும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை நடந்து வருவதால் வேறு எதும் பேச முடியாது என்றும் இதுவரை எங்களது மருத்துவர்களுக்கு மட்டுமே விசாரணை ஆணையத்திடம் இருந்து சம்மன் வந்துள்ளதாகவும், எனக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக காய்ச்சல் என்ற அறிக்கை தரப்பட்டது உண்மையென்றால் மற்ற அறிக்கைகளும் சட்டம் ஒழுங்கிற்காக தரப்பட்ட அறிக்கைகளா? என்று சமூக வலைத்தள பயனாளிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா மர்ம மரணம் ?

ஜெயலலிதா மர்ம மரணம்- 15 பேருக்கு நீதிபதி நோட்டீஸ்

ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?

ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனையில் நடந்தது என்ன? – அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *