ஜெயலலிதாவை பதவி விலக கோரவில்லையே கமல்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதால் முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என கூறும் நடிகர் கமல்ஹாசன், ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் ஏன் அவ்வாறு கூறவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாகவே ஊழல் மலிந்து கிடக்கிறது. ஊழல் மலிந்துவிட்டதால் முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என கூறும் நடிகர் கமல்ஹாசன் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவை ஏன் அவ்வாறு கூறவில்லை. கருணாநிதியின் குடும்பமே ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்ற போது பதவி விலக கோராதது ஏன்? ஸ்டாலினுக்கு அருகில் இருந்துகொண்டு ஊழல் குறித்து கமல்ஹாசன் ஏன் பேசுகிறார்?’என கேட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=Zj7Co6nvMR0

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *