ஜெயலலிதா மரணத்திற்கு பின் சிறு சலனம் இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை டிடிவி தினகரன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இன்று குடகு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
*நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யாதது ஏன்?
சசிகலா நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது, சசிகலா பெயரில் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஜெயலலிதா மரணத்திற்கு பின் சிறு சலனம் இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம்.
முதலமைச்சர் அணி நடத்தியது அதிமுக பொதுக்குழு அல்ல, பொதுக்குழுவை பொதுச்செயலாளர் தான் அறிவித்திருக்க வேண்டும்.
பொதுக்குழு என்ற பெயரில் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லாது.
ஜெயலலிதா பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவது பதவிக்காகவே.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசுவது எது உண்மை?.
பயத்தால் அமைச்சர்கள் மாறி மாறி பேசுகிறார்கள்.
நோய்தொற்று ஏற்படும் என்பதால் 2016 அக். 1-ம் தேதிக்கு பிறகு ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.





