தமிழக மீனவர் கொலை குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா கடற்படை மறுப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தமிழக மீனவர் கொலை குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா கடற்படை மறுப்பு

தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், அதில் ஒருவர் பலியானதாகவும் இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஸ்ரீலங்கா கடற்படை அறிவித்துள்ளது.

எல்லை தாண்டுகின்ற தமிழக மீனவர்கள் மீதோ அல்லது அவர்களது படகுகள் மீதோ துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கான அறிவுறுத்தல் சிப்பாய்களுக்கு வழங்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் சமிந்த வலாகுலுகே ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

இவ்வார இறுதியில் நடைபெற ஏற்பாடாகிவரும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள தமிழக மீனவர்கள், அந்த நிகழ்வை சீர்குலைக்கச் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்திய கடற்படைப் பேச்சாளர், எல்லை தாண்டுகின்ற மீனவர்கள் எவராக இருந்தாலும் கைதுசெய்து சிறைவைக்கும் அதிகாரம் கடற்படைக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, உயிரிழந்த மீனவர் பிரிசட்சோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று இராமேஸ்வர மீனவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites