வேட்டிய மடித்து கட்டினா நான் ரவுடி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காரைக்குடியில் மணிசங்கர் ஐயர், திருமாவளவன் ஆகியோரை கண்டித்து பாஜகவின் நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வேஷ்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் என கொந்தளித்துள்ளார்.

கடந்த 6-ஆம் தேதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடியது. அப்போது சென்னையில் ஒரு மாநாட்டையும் நடத்தியது அக்கட்சி.

அதில் பேசிய திருமாவளவன், அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக சங் பரிவார் போன்ற அமைப்புகள் கூறி வருகின்றன. பெரும்பாலான புத்த விகார்களையும் சமண கோயில்களையும் இடித்து இந்து கோயில்கள் கட்டப்பட்டன என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த விகார்களைக் கட்ட வேண்டும் என்று கூறமுடியுமா? என பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் குஜராத் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த மணிசங்கர் ஐயர், பிரதமர் மோடியை இழிவான மனிதர் என விமர்சித்தார். இந்த இரண்டு சம்பவங்களையும் கண்டித்து பாஜகவினர் காரைக்குடியில் போராட்டம் நடத்தினர். இதில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வேஷ்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் என கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *