சரக்கு அடிக்கக் கூடாது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாளை இரவு உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.

தமிழகத்திலும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்தி வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகியுள்ளது.

எனவே காவல்துறை இரவு 1 மணிக்கு மேல் யாரும் கொண்டாடக் கூடாது என்று அறிவித்துள்ளது. அதேபோல் நள்ளிரவில் கோவில்களை திறந்து வைத்திருப்பதும் ஆகம விதி மீறலாகும். எனவே அரசு அதை தடை செய்யவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *