உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளன. அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

அதிமுகவின் இருதரப்பும் தங்களுக்கே இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தன. எனவே இதுதொடர்பாக இன்று காலை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராக இருதரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இருதரப்பினரும் நேரில் ஆஜராகியுள்ளனர். தேர்தல் ஆணையத்தில் சசிகலா, ஓபிஎஸ் அணி, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றன. தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி முன்னிலையில் இந்த வாதம் நடைபெற்று வருகிறது.

சசிகலா அணி சார்பில் வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோர் வாதாடுகின்றனர். ஓபிஎஸ் அணி சார்பில், வைத்தியநாதன், குருகிருஷ்ண குமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதாடுகின்றனர். பிற்பகல் வரை இந்த விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News