பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல் அமைச்சர்,துணை முதல்-அமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை கடந்த 28-ந்தேதி தொடங்கியது.

முதல் நாள் விழா ஆன்மீக விழாவாகவும், 2-வது நாள் விழா அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது.
இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு காலையிலேயே ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நினைவிடம் வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஜோதி ஏந்தி வந்தனர்.

நினைவிடம் மற்றும் தங்க கவசத்தில் ஜொலித்த முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

காலை 8.44 மணிக்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், பாஸ்கரன், ஆர்.பி. உதயகுமார், மணிகண்டன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி. மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *