​அடுத்த கல்வியாண்டில் 800 பொறியியல் கல்லூரிகளுக்கு மூடு விழா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கடந்த 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக 30%க்கும் குறைவான இடங்களே நிரம்பும் பொறியியல் கல்லூரிகளை அடைக்கப்பட உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) தலைவர் அனில் தத்தாத்ரயா கூறியுள்ளார்.

பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தத்தாத்ரயா நாடு முழுவதும், 2018-19 கல்வி ஆண்டில் குறைவான தரத்துடனும், முழுமையான அளவில் சீட்கள் நிரப்பப்படாத 800க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என கூறினார்.

தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 10,363 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன, இதில் பெரும்பாலான கல்லூரிகள் போதிய தரத்துடன் இல்லாமல் இருப்பதால், முழு அளவில் சீட்கள் நிரப்ப முடியாமல் உள்ளன.

கடந்த 2014-15 முதல் 2017-18 வரை நாடு முழுவதும் 410 பொறியியல் கல்லூரிகள் இதே போன்று மூடப்பட்டன.

AICTE வளைத்தளத்தில் உள்ள தகவலின் படி மாநில வாரியாக அடைக்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா – 64
உத்தரப்பிரதேசம் – 47
மகராஷ்டிரா – 59
ஆந்திரா – 29
ராஜஸ்தான் – 30
தமிழகம் & அரியானா – 31
குஜராத் – 29
கர்நாடகா & மத்தியப்பிரதேசம் -21

பஞ்சாப் – 19ஆண்டு வாரியாக கல்லூரிகள் மூடப்பட்ட விவரம்:
2014-15: 77
2015-16: 125
2016-17:149
2017-18-65

அடைக்கப்பட உள்ள 800க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *