அய்யாக்கண்ணு கைது – முதல்வர் பழனிசாமி விளக்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கேள்வி நேரம் முடிந்த பின் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரை பார்க்க வந்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வரும் வழியிலே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக பேசினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாதவரம் – அம்பத்தூர் பகுதிகளில் துண்டுச்சீட்டு பிரச்சாரத்தை செய்ய அனுமதியை பெற்றுவிட்டு, அனுமதி பெறாமல் வடபழனி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும், அதன் காரணமாகவே அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் விளக்கமளித்தார்.

மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன் கூறியது போல எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை பார்க்க வரும் போது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படவில்லை எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்தார்.