நடிகர் ராதாரவி இன்று தி.மு.க.வில் இணைவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நடிகர் ராதாரவி இன்று தி.மு.க.வில் இணைவு

நடிகர் ராதாரவி இன்று திமுகவில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான் என்று தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்த நடிகர் ராதாரவி இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடும்பத்திற்குள் வந்தது போல உள்ளதாக கூறினார். இப்போது அதிமுகவே இல்லை என்று கூறிய அவர், மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என்றார். நான் நம்பி போன அம்மா இறந்து விட்டதாக கூறிய அவர், இப்போது ஜெயலலிதாவை தேடி வந்ததாக கூறியுள்ளார். இப்போது எதிர்கட்சியான உள்ள திமுக விரைவில் ஆளுங்கட்சியாக ஆட்சியில் அமரும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது தலைவர்கள் யாரும் இல்லை என்றும் தகுதி படைத்த ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே என்றும் ராதாரவி தெரிவித்தார். திரைப்படங்களில் ஹீரோ,வில்லன்,குணச்சித்திர வேடங்களில் நடித்த ராதாரவி முதலில் திமுகவில் மிக தீவிரமாக செயல்பட்டவர். ஒருகட்டத்தில் திமுகவிலிருந்து விலகி அதிமுக.,வில் சேர்ந்தார்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ பதவியும் வகித்தார். சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தற்போது அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. இதையடுத்து தற்போது திமுகவில் இணைந்துள்ளார் ராதாரவி.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites