செல்போனை உடைத்ததால் நண்பனை கொலை செய்த சிறுவன்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திருவாரூர் அருகே செல்போனை உடைத்ததால் 8-ம் வகுப்பு மாணவனை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் மாஜித் முகமது என்ற மாணவன் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்த அபுல் கலாம் ஆசாத் என்ற 15வயது சிறுவனும், மாஜித் முகமது இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபுல் கலாம் ஆசாத்தின் செல்போனை மாஜித் முகமது உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனிடையே இருவரும் நாச்சிகுளம் ரயில்வே கேட் அருகே சந்தித்தபோது தகராறு ஏற்பட்டு மாஜித் முகமதை கழுத்தை நெறித்து அபுல் கலாம் ஆசாத் கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சென்ற போலீசார், 8-ம் வகுப்பு மாணவன் மாஜித் முகமதின் உடலை கைப்பற்றி, அபுல் கலாம் ஆசாத்தை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=nKlWu_OB1sA

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *