சோப்பு போட்டு குளித்தால் 6 மாதங்கள் ஜெயில்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கிருக்கும் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, சியக்காய் போன்றவற்றை பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் குளிக்கும் போது, சோப்பு, ஷாம்பு, சியக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். சிலர் சாப்பிட்ட இலைகளை ஆற்றில் வீசுகின்றனர். இதனால் பம்பை ஆற்றில் அசுத்தம் அதிகரிக்கிறது.

ஆறு அசுத்தமாவதைத் தடுக்கும் வகையில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சியக்காய் ஆகிய பொருட்களை குளிக்க பயன்படுத்தக் கூடாது என பத்தணந்திட்டா மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதை மீறும் பக்தர்களுக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்தியா முழுவதிலிருந்து வரும் பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *