மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐ.ஐ.டி. தேர்வு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில், சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2017-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 8-வது இடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.

தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் பெங்களூர் முதலிடத்தையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும், பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

நாட்டின் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தை டெல்லியின் மிரந்தா ஹவுஸ் கல்லூரி பிடித்துள்ளது. இதுபோல 4-வது இடத்தை திருச்சி பிஷப் ஹெபெர் கல்லூரியும், 10-வது இடத்தை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியும் பிடித்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *