தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதி – பிரேமலதா கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்பாரா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆக பிரேமலதா பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் கட்சி பணிகளில் அவரால் முழு கவனம் செலுத்த முடியவில்லை.

இதனால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை தே.மு.தி.க. பொதுச் செயலாளராக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னரே விஜயகாந்த் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது அது கைகூடவில்லை. இதனால் பிரேமலதாவை தே.மு.தி.க. பொதுச் செயலாளராக்க முயற்சி செய்யப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஜயகாந்தின் இடத்தில் இருந்து கட்சியை வழி நடத்துவதற்காக பிரேமலதாவை பொதுச்செயலாளராக்க விஜயகாந்த் மீண்டும் முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்தை அவர் கேட்டு வருகிறார்.

எனவே விரைவில் பிரேமலதா தே.மு.தி.க.வில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக அவர் பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *