திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

.திருச்செந்துார் முருகன் கோவில், முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. கடற்கரையை ஒட்டி இருக்கும் கோவிலில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது, கோடை விடுமுறை என்பதால், கூட்டம் அதிகரித்துள்ளது.நேற்று பகல், 11:00 மணியளவில், திருச்செந்துார் கடல் திடீரென உள்வாங்கியது. 50 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதால், பாறைகள் வெளியே தெரிந்தன. கடலில் குளித்து கொண்டிருந்த பக்தர்கள் வியப்படைந்தனர். மாலை, 3:00 மணியளவில், கடல் பழைய நிலைக்கு திரும்பியது.