இன்றைய ராசிபலன் 02.02.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத் தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கன்னி: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவு கள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணா மல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

விருச்சிகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர் கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோ கத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார் கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தினருடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி யிருக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கும்பம்: கடினமான வேலை களையும் மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள் வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *