இன்றைய ராசிபலன் 01.12.2017

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வாகன வசதி பெருகும். வியாபாரத் தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கடகம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். வராது என்றிருந்த பணம் வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியா மல் உழைக்க வேண்டி வரும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

துலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஆதரவு பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்: நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர் கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல் படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *