Rasi palan today | இன்றைய ராசிபலன் 18.12.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
Rasi palan today | இன்றைய ராசிபலன் 18.12.2019

மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உறவினர்களால் அனுகூலம் இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காண முடியும்.

ரிஷபம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு ஏற்ப நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்
இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்கள் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

கடகம்
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.

தனுசு
இன்று குடும்பத்தில் அமைதி நிலவ அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். உறவினர்கள் வழியில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மகரம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.

கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மீனம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News