இன்றைய ராசிபலன் I 05.11.17

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மேஷம்: காலை 8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமை கூடும். தள்ளிப் போன விஷயங் கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். நிம்மதியான நாள்.

ரிஷபம்: காலை 8.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற் கும் ஆளாவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் சச்சரவு வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உ யரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப் பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

சிம்மம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர் கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசு வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். முயற்சிகள் பலிதமா கும் நாள்.

கன்னி: காலை 8.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் வரும். தடைகள் உடைபடும் நாள்.

துலாம்: காலை 8.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலை யாட்களால் விரையம் வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக் கும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியா பாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். நினைத் தது நிறைவேறும் நாள்.

கும்பம்: நட்பு வட்டம் விரியும். எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபா ரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாப மடைவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங் களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *