யாழில் வரலாறு காணாத வகையில் திரண்டுள்ள மக்கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். நல்லூரானின் தேர்த் திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில் இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்கள்.

உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுவதோடு, 24ஆம் நாளான இன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

அந்த வகையில் தற்போது யாழ்ப்பாணம் முழுவதும் திருவிழா களைகட்டியுள்ளது. மக்கள் அனைவரும் மிகவும் பக்தியுடன் தேரின் வடம் பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

என்றுமில்லாத வகையில் யாழில் கூடியுள்ள பக்தர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும், காவடி எடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

ஆலயத்தை சுற்றியும் ஏராளமான பக்த அடியார்கள் காணப்படுகின்றார்கள். தேரைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தையும், வடம் பிடித்து தேரை இழுக்கும் காட்சிகளையும் பார்க்கும் போது மெய்சிலிர்க்க வைக்கின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *