காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை வழங்க ரோஹித்த தயார்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விபரங்களை சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அதன் பின்னர் உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், கிழக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 156 நாட்களை கடந்துள்ளது.

எனினும், தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வை பெற்றுக்கொடுக்காத நிலையில், இன்றைய தினம் கிழக்கு ஆளுநரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது. மகஜரை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டதாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *