ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு! அப்படி என்ன பேசினார்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒருவருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் தற்போது வரை அரசியல் கட்சி துவங்கும் பணிகளை மட்டுமே செய்து வருகிறார்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார் சேலம் பகுதி ரஜினி ரசிகர் பழனி. அந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் தற்போது பழனியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்தம் சொட்ட சொட்ட அவர் பேசும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.