கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற மனைவி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்கு பணமில்லாததால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஸ்வரூப் மௌர்யா. இவரது மனைவி சஞ்சு தேவி. இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய மௌர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் பலத்த காயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் சஞ்சு தேவி அவதிப்பட்டு வந்துள்ளார். கணவரின் சிகிச்சைக்காக பல்வேறு இடத்தில் பணத்தை புரட்ட முயற்சித்துள்ளார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

கணவரின் உயிரா அல்லது குழந்தையா என பார்க்கும் போது கணவன் தான் முக்கியம் என முடிவு செய்து பிரோக்கர் ஒருவரிடம் ரூ.42 ஆயிரத்துக்கு அண்மையில் பிறந்த குழந்தையை விற்றுள்ளார். அந்த பணத்தை மருத்துவமனையில் செலுத்தி கணவரின் உயிரை காப்பாற்றினார். இந்த வி‌ஷயம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *