ஜனாதிபதியாகும் கனவு பஸிலுக்கு இல்லை என்கிறது மஹிந்த அணி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“ஜனாதிபதியாகும் கனவில் பஸில் ராஜபக்ஷ இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் பஸில் உடனே நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார்.”

– இவ்வாறு மஹிந்த அணியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“எமது அணியின் சார்பில் பஸில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகின்றது. உண்மையில், ஜனாதிபதியாகும் கனவில் அவர் இல்லை.

இப்போதைய அரசமைப்பின்படி, மஹிந்தவால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. மஹிந்தவால் போட்டியிட முடியாத நிலை வரும்போது பஸிலால் இந்த நாட்டில் இருக்க முடியாது. அவர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுவார். இதனால் அவர் அப்போது நாட்டை விட்டுச் சென்றுவிடுவார்.

பஸில் ஊழல்வாதியல்லர். அவர் எந்தவோர் ஊழலிலும் ஈடுபடவில்லை. அவர் சிறந்த அரசியல் செயற்பாட்டாளர். மஹிந்தவுக்குப் பக்கபலமாக இருப்பவர். அதனால்தான் அவர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அவரை அடக்குவதன் மூலம் மஹிந்தவின் செயற்பாட்டை முடக்குவதற்கு முற்படுகின்றனர்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *