அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப் புறக்கணிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

எனினும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளில் எந்தப் பாதிப்புக்களும் இடம்பெறாது எனவும், மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் வழமை போல் இயங்குமென்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ்வேலை நிறுத்தம் மகரகம புற்றுநோய் வைத்தியசாலை, அனைத்து சிறுநீரக சிகிச்சை நிறுவனங்கள், நாடு முழுவதுமுள்ள விபத்துப்பிரிவுகள் என்பவற்றை பாதிக்காது என்றும் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அடையாள வேலைநிறுத்தம் நாளை 06 ஆம் திகதி காலை 8 மணிக்கு நிறைவடையும். எனினும் எதிர்வரும் 09 ஆம் திகதிக்குள் சைட்டம் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதுபோனால் ஏனைய துறைகளையும் உள்ளடக்கியதாக இவ்வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *