புதிய அரசமைப்பு தொடர்பில் டில்லியிடம் இலங்கை ‘கப்சிப்’! – இருதரப்பு உறவு பலமாகவே உள்ளது என்று மாரப்பன தெரிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“புதிய அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு நான் எதுவும் விளக்கமளிக்கவில்லை. அதற்கு இன்னமும் காலஅவகாசம் உள்ளது. ஆனாலும் பாதுகாப்பு, பொருளாதார, சிநேகபூர்வ விடயங்கள் குறித்துப் பேசினோம். பிராந்திய அரசியல் குறித்தான விடயத்தில் இந்தியா தெளிவாக உள்ளது. அதனால்தான் எங்களுடன் நெருக்கமாகவும் உள்ளது. கொழும்பை புதுடில்லி நன்கு புரிந்துவைத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கான உத்தரவாதத்தை என்னிடம் தந்தார்.”

– இவ்வாறு கருத்து வெளியிட்டார் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன.

இந்தியாவுக்கான விஜயம் மற்றும் இந்தியப் பிரதமருடனான சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் மாரப்பன மேலும் குறிப்பிட்டுள்ளதாவது”-

“இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாகவும், திருப்திகரமானதாகவும் அமைந்தது. இலங்கையுடனான பரஸ்பர உறவுகள் குறித்துப் பேசினோம். புதிய அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து நான் அவரிடம் விளக்கமளிக்கவில்லை. ஏனெனில், அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மற்றும் பிராந்திய இராஜதந்திர மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து புதுடில்லி தெளிவாக உள்ளது. என்ன விடயங்கள் நடந்தாலும் பாரதத்துடனான எமது தொடர்புகள், எமது நிலைப்பாடுகளை நான் அவரிடம் எடுத்துச்சொன்னேன். இலங்கை விடயத்தில் அவர்கள் தெளிவாக உள்ளதால் இரு நாடுகளின் நட்பு தொடரும்” – என்றார் மாரப்பன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *