எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்! – பிரதமர் ரணில் திட்டவட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டில் எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் தொடரும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னாரில் உலர் வலய நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்புக் குறித்து யாருமே அச்சப்படத் தேவையில்லை. இதனை அமைப்பதற்கு மக்கள் அரசுக்கு ஆணை வழங்கியுள்ளதால் இந்த விடயத்தை அரசால் உதாசீனம் செய்ய முடியாது.

புதிய அரசமைப்பில் பௌத்த மதத்துக்குக் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும்.

எனவே, நாட்டில் அமைதியான வழிமுறைகளில் நாம் அனைவரும் அரசமைப்பு உருவாக்கத்தில் பங்குகொள்ள வேண்டும்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *