பிரதமருக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (புதன்கிழமை) சபாநாயகர் கரு ஜெயசூர்யவிடம் ஒன்றிணைந்த எதிரணியினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் இந்த பிரேரணையில் 4 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இன்று இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.