முல்லைத்தீவு கடற்கரை மயான அமைதியில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்தே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகின்றது.

கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்றும், மீனவர்கள் அச்சத்தால் தமது மீன்பிடிப் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அப்பால் பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்கரைப் பகுதிகள் ஆளரவமற்று அமைதியாகக் காட்சியளிக்கின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *