நாட்டில் சட்டம் ஒழுங்கை பேண வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : ஜனாதிபதி பணிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டில் சட்டம் ஒழங்கை பேண வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு, ஜனாதிபதி இவ்வாறு பணித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தின்போது, கஹவத்தை நகரில் தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையான சம்பவம் தொடர்பாகவும், தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சிற்குள் பொதுபலசேனா அமைப்பு நுழைந்தமை தொடர்பாகவும் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அமைச்சர்களான ரிஷாட் பதியூதின், கபீர் ஹாசீம், ரவூப் ஹக்கீம், துமிந்த திசாநாயக்க, சாகல ரத்னாயக்க ஆகியோரும் நாட்டில் தற்போதுள்ள பதற்ற நிலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதனை தொடர்ந்தே ஜனாதிபதி இவ்வாறு பணித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *