இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள அனைத்துலக சூரியசக்தி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
இன்று காலை புதுடெல்லியில் ஆரம்பமான குறித்த மாநாட்டில், 45 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரியும் கலந்துகொண்டுள்ளார். மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி உரையாற்றியதோடு, அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.





