புலிகளில் கவனம் செலுத்தியதால் குப்பையில் கவனம் செலுத்தவில்லை – மகிந்த சொல்கிறார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனத்தினைச் செலுத்த முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் ஸ்ரீமகா விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் நாட்டினது பிரதானமான பிரச்சினையிலேயே அதிக கவனத்தினைச் செலுத்தியிருந்தோம். அதன்படி யுத்தத்தினையும் நிறைவுக்கு கொண்டுவந்திருந்தோம். எமது ஆட்சிக் காலத்தின் இறுதியில் மீதொட்டமுல்ல குப்பைமேடு தொடர்பாகவும் அதற்கான தீர்வுத் திட்டங்களும் வகுக்கப்பட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனது” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *