கண்டி – திகன தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நபர்இ நேற்றுமுன்தினம் மரணமடைந்தார்.
இதில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் உடல் இன்று பிற்பகல் வேளையில் இறுதிக் கிரியைகளுக்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இதனால் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்பாடமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளைஇ குறித்த சம்பவத்திற்கு எதிராக தெல்தெனிய நகரிலுள்ள 2 கடைகள் மீது நேற்றைய தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் சிலர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
height=”445″ class=”alignnone size-full wp-image-31425″ />







