இறக்காமத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அம்பாறை – இறக்காமம் மாயக்கல்லி மலையில் அதிகளவில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், நேற்றைய பௌத்த பிக்குகள் சிலருக்கு வழிப்பாடுகளில் ஈடுபடும் அனுமதியை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

குறித்த பகுதிக்குள் எவரும் பிரவேசிக்க கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், வெசாக் தினத்தை முன்னிட்டு இறக்காமம் மாயக்கல்லி மலைக்கு பக்தர்கள் வழிப்பாட்டிற்காக சென்றுள்ளனர்.

இதற்கமைய மாயக்கல்லி மலைப் பகுதியில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க 1000ற்கும் மேற்பட்ட பொலிஸாரும், கலகத்தடுப்பு பொலிஸாரும் தீவிர கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அத்துடன், வெசாக் வழிப்பாட்டிற்காக வருகை தந்த பத்தர்கள் தீகவாபி விகாரைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும், மாலை நேரம் பௌத்த பிக்குகள் குழுவொன்று மாயக்கல்லி மலைக்கு சென்றதுடன், அவர்களை வழிப்பாட்டில் ஈடுபடுவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட அரச அதிபர் துஷத்த பி வணிசூரியவும் வருகை தந்துள்ளார்.

மாயக்கல்லி மலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் இரு தடவைகள் தடவைகள் பௌத்த விகாரை அமைப்பதற்கு முயற்சித்து வந்த நிலையில்இ இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் வரை யாரும் அப் பகுதிக்குள் பிரவேசிக்க கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *